இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்...

(நாணயம் விகடன் (ஆகஸ்ட் 15, 2010) இதழில் திரு.சொக்கலிங்கம் பழனியப்பன். டைரக்டர் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் அவர்கள் இஸ்லாமிய பங்கு முதலீடுகள் குறித்து எழுதிய கட்டுரையை நமது இணையத்தள வாசகர்களுக்கு நன்றியுடன் அளிக்கின்றோம்).


இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை. முதலில் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்றால் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஷரியா முதலீடு...?

ஷரியா என்பது இஸ்லாமியச் சட்டமாகும். இந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் முதலீடு, ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்று கூறப்படுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் துறை!

இன்றைய தேதியில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஷரியா முதலீட்டுத் துறையும் ஒன்று. நமது கேரள அரசாங்கம் சென்ற ஆண்டு ரூ.1,000 கோடி அளவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பித்து, அடிப்படைக் கட்டுமானத் துறைக்கு உபயோ கிக்கத் திட்டமிட்டது. தற்போது நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு கொடுத்துள்ளது என்றாலும், இந்த வங்கி தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளன.

லண்டனைச் சார்ந்த எஃப்.டி.எஸ்.இ. நிறுவனம் இஸ்லாமிய முதலீடுகள் ஆண்டுக்கு 15 - 20% வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. பங்கு சார்ந்த முதலீடுகள் 2010-ல் 53 பில்லியன் டாலருக்கு மேலாக (கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் கோடிக்கு மேல்) சென்றுவிடும் என்று கூறுகிறது. மொத்தத்தில் இது ஒரு வளரும் துறை.

உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய நிதி நிறுவனங்களும் இந்தத் துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புக்களைக் கருதி இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதே போல் சட்ட நிறுவனங்களுக்கும் இந்த முதலீடுகளினால் நல்ல வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஷரியா குறியீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதேபோல் சில இ.டி.எஃப். திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள்...!

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று கேட்டால், ஷரியா சட்டமானது, குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று கூறுகிறது. ஆகவே ஃபிக்ஸட் டெபாஸிட் போன்ற கடன் திட்டங்கள் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் ஆகாது. பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது ஹராம் ஆகும்.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள், தாங்கள் பங்குச் சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகள் சரியானதுதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களின் மதச்சட்டம் அறிவுறுத்துகிறபடிதான் தாங்கள் நடந்து கொள்கி றோமா என்கிற கேள்வியும் அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது. இதனால் சமீபகாலமாக ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பமுள் ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த முறை முதலீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

நிஃப்டி ஷரியா!

நமது தேசியப் பங்குச்சந்தை இரண்டு ஷரியா குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிஃப்டி ஷரியா மற்றும் சி.என்.எக்ஸ். 500 ஷரியா என்பதே அந்த இரண்டு திட்டங்கள். இவைகள் முறையே நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளில் இருந்து ஃபில்டர் செய்தவையாகும். இந்த ஃபில்டர் எவரால் எவ்வாறு செய்யப்படுகிறது?

தேசியப் பங்குச்சந்தையில் உள்ள பல குறியீடுகளை, தேசியப் பங்குச்சந்தை, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு புவர்ஸ்) நிறுவனத்தின் கூட்டுடன் நிர்வகித்து வருகிறது. அவ்வாறே ஷரியா குறியீடுகளையும் நிர்வகித்து வருகிறது. எஸ் அண்டு பி நிறுவனம் ஷரியா குறியீடுகளுக்காக 'ரேட்டிங்ஸ் இன்டெலிஜென்ஸ் பார்ட்னர்ஸ்' (ஆர்.ஐ.) என்ற லண்டன்/குவைத் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்நிறுவனத்துக்கு லண்டன், குவைத் மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. இந்த ஆர்.ஐ. நிறுவனம் நிறைய இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன், ஷரியா மேற்பார்வை வாரியத்துடனும் கைகோத்து வேலை செய்கிறது. இந்த ஷரியா வாரியத்தில் சவுதி அரேபியா, கனடா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கல்விமான்கள் இடம் பெற்றுள்ளனர்.


கடைப்பிடிக்கும் விதிமுறைகள்!

ஷரியா குறியீட்டின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இக்குறி யீட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில் இடம் பெறும் நிறுவனங்கள் கீழ்கண்ட ஃபில்டர்களைத் தாண்டி இடம் பெற்றுள்ளன.

1. துறை சார்ந்த ஃபில்டர்கள்: பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகள் மற்றும் வேறு சில துறைகளில் ஈடுபட்டி ருக்கக்கூடாது.

2. அதிகக் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு காலத்தில் கடன் வாங்கியுள்ள எந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யக்கூடாது என்று கருதியவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நவீன பொருளாதாரத்தில் அவ்வளவு கடினமான பாதையை எடுத்தால், முதலீடு செய்யக் கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். ஆகவே அது போன்ற கருத்துக்களில் இருந்து சிறிது மாறி, இன்றைய தினத்தில், நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் அதன் பங்கின் மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33%-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்ற ஃபில்டரை கடைப் பிடிக்கின்றனர்.

3. தொழிலில் வர வேண்டிய பணம் (Accounts Receivable) மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 49%-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

4. நிறுவனம் தனது கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வட்டி தரும் உபகரணங்கள், மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33% குறைவாக இருக்க வேண்டும்.

5. ஷரியாவுக்கு உட்படாத வட்டி அல்லாத பிற வழிகளில் இருந்து வரும் வருமானம், மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது 5%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. ஷரியாவுக்கு உட்படாத முதலீடுகளினால் வரும் வருமானத்தை சுத்தப்படுத்துவதற்காக, முதலீட்டாளர் களுக்கு சுத்தப்படுத்த வேண்டிய விகிதத்தையும் இந்தக் குறியீடு தெரிவிக்கும்.

ஷரியா இ.டி.எஃப்.!

நம் இஸ்லாமிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று இப்போது பார்ப்போம்.

பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஷரியா பீஸ் (Shariah BeES) என்ற இ.டி.எஃப்-ஐ நடத்தி வருகிறது. மார்ச் 2009-ல் துவங்கப்பட்ட இந்த இ.டி.எஃப், இந்தியாவின் முதல் ஷரியாவுக்கு உட்பட்ட இ.டி.எஃப். ஆகும். இது நிஃப்டி ஷரியா குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை நிஃப்டி ஷரியா குறியீட்டின் மதிப்பில் 1/10 ஆக இருக்கும். இந்த இ.டி.எஃப். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் அதே அளவில் முதலீடு செய்யும். தற்போது இதன் விலை ரூ.127 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ1.24 கோடியாகும். கடந்த ஓராண்டில் இந்த இ.டி.எஃப். 14.6% வருவாயைத் தந்துள்ளது. இதை டீமேட் கணக்கு மூலம்தான் வாங்க முடியும்.

ஷரியா மியூச்சுவல் ஃபண்ட்!

டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாரஸ் எத்திக்கல் ஃபண்ட் என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஃபண்ட் இந்தியாவின், ஷரியாவுக்கு உட்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிர்வகிக்கும் தொகை ரூ.24.58 கோடியாகும். இதன் என்.ஏ.வி. ரூ.23.21. இத்திட்டம் மார்ச் 2009-ல் துவங்கப்பட்டது. இதன் கடந்த ஓராண்டு கால வருமானம் 42.8% ஆகும். இந்த ஃபண்டை வாங்குவதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்த ஃபண்ட் வருடத்திற்கு ஒரு முறை எவ்வளவு பணத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான ஸ்டேட்மென்ட்டை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.

டாடா செலக்ட் ஈக்விட்டி என்ற திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் ஷரியாவுக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறாத போதிலும், மதுபானம், புகையிலை, நிதித்துறை மற்றும் வட்டி கொடுக்கும் உபகரணங்களில் முதலீடு செய்வதில்லை என்று அறிவித்து, அவ்வாறே நிர்வகித்தும் வருகிறது. இந்த ஃபண்ட் 139 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய என்.ஏ.வி. ரூ 63.31. இத்திட்டம் மே 1996 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் ஜூன் 30, 2010 வரையில் ஆண்டுக்கு 18.97% வருமானமாகக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 37.5% -யும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 19.5% -யும் வருமானமாகக் கொடுத்துள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் தவிர, நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் மேலே கண்ட 6 ஃபில்டர்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஷரியாவுக்கு உட்பட்ட சில லார்ஜ் கேப் பங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
இன்ஃபோசிஸ்,
எல். அண்ட் டி,
பார்தி ஏர்டெல்,
ஹிந்துஸ்தான் யூனிலிவர்,
ஒ.என்.ஜி.சி.,
பி.ஹெச்.இ.எல்.,
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,
என்.டி.பி.சி.,
டாடா பவர்.

மேற்கண்ட முதலீடுகளுடன், தங்கம்/வெள்ளி போன்றவற்றிலும், ரியல் எஸ்டேட்டிலும் நேரடியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். டெலிவரி அடிப்படையில் முதலீடு செய்யும்போது அவை ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளே!

குறிப்பு இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களையோ அல்லது பங்குகளையோ அவற்றின் செயல்பாட்டுத் திறனை வைத்துக் கொடுக்கவில்லை. மாறாக ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய இந்தியாவில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மட்டுமே தெரிவிக்க முனைந்துள்ளோம். முதலீட்டாளர்கள் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வசதிக்கு ஏற்ப தங்களது முதலீட்டை மேற்கொள்ளவும்


thanks: www.tmmk.info

பிரான்ஸில் இஸ்லாமிய வங்கி

பிரான்ஸில் இஸ்லாமிய வர்த்தக வங்கி முறை வியடமான அமர்வு
சர்வதேச குழு: ருயீன் முஸ்லிம் யூனியன் மே மாதம் 8ம் திகதி ருயீன் நகரத்தில் இஸ்லாமிய வர்த்தக அமர்வொன்றை நடாத்தவுள்ளது.

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): AIDIMM இலிருந்து கிடைத்த தகவலின் படி, பிரான்ஸ் பொருளாதார நவீன அபிவிருத்தி நிலையம் (AIDIMM) இவ்வமர்வை நடாத்தவுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய வங்கியை நிறுவும் முக்கிய நோக்காகவும், வர்த்தகத் துறையில் இஸ்லாமிய நிதி அமைப்பின் உபயோகம் பற்றியும் பிரான்ஸில் வங்கி முறை பற்றியும் கலந்து கொள்பவர்கள் கலந்துரையாடுவார்கள்.


மற்றும் கலந்து கொள்பவர்களுக்காக வர்த்தகத்தில் இஸ்லாமிய வங்கிகள் விடயமான கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியதாகவும் காலம் ஒதுக்கப்படும்.


அத்துடன் பொருளாதார, இஸ்லாமிய வங்கி முறை விடயமான மென்பொருள்கள், புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்படும்.

இஸ்லாமிய நிதியத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்

al-wadiah = safe keeping
bai'muajjal = deferred-payment sale
bai'salam = pre-paid purchase
baitul mal = treasury
fiqh = jurisprudence
Hadith = Prophet's commentary on Qur'an
hajj = pilgrimage
halal = lawful
haram = unlawful
ijara = leasing
iman = faith
mithl = like
mudaraba = profit-sharing
mudarib = entrepreneur-borrower
muqarada = mudaraba
murabaha = cost-plus or mark-up
musharaka = equity participation
qard hasan = benevolent loan (interest free)
qirad = mudaraba
rabbul-mal = owner of capital
riba = interest
Shariah = Islamic law
shirka = musharaka

விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே!



வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு

கடன்சுமை தாளாமல் விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.

வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.

அகிம்சை, மரக்களி உணவு, சுற்றுப் புறச்சூழல் ஆகிய தளங்களின் சிறந்த சேவை ஆற்றுவோருக்கு கருணா ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு பத்மஸ்ரீ முசாபர் ஹூசேன், சின்னி கிருஷ்ணா, நந்திதா கிருஷ்ணா ஆகியோருக்கு விருதும் 1 லட்ச ரூபாய் பொறிகிழியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் இஸ்லாமிய வங்கி முறையே தேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு என்றுள்ளார். சு.சுவாமி என்ற அரசியல் தரகரோ, கேரள அரசு இஸ்லாமிய வங்கியைத் தொடங்குவதற்குத் தடை விதிக்குமாறு வழக்குப் போடுகிறார். எம்.எஸ். சுவாமி நாதன் உரையை கேட்டாவது, சுப்ரமணியசுவாமி திருந்த வேண்டும்.

-ஹாஜாகனி
Thamks: www.tmmk.info

உலகில் உள்ள இஸ்லாமிய வங்கிகளின் பெயர்கள்:

அல்ஜீரியா - பேங்க் அல்பராக்கா அல்ஜீரியா, அல்ஜீர்ஸ்

ஆஸ்திரேலியா - MCCA முஸ்லிம் கம்யுனிட்டி கோஆபெரடிவ்
MCCU (முஸ்லிம் கம்யுனிட்டி கிரெடிட் யூனியன்)

பகாமாஸ் - அகிதா இஸ்லாமிக் பேங்க் இன்டர்நேஷனல் லிமிடெட்
பேங்க் அல் தக்வா லிமிடெட்
தார் அல் மால் அல் இஸ்லாமி டிரஸ்ட், நாசு
இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ஆப் த கல்ப் லிமிடெட்
இஸ்திஷாரா கன்சல்டிங் டிரஸ்ட், பகாமாஸ்
மஸ்ஸ்ரப் பைசல் இஸ்லாமிக் பேங்க் & டிரஸ்ட் பகாமாஸ் லிமிடெட்
பஹ்ரைன் - ABC இன்வெஸ்ட்மென்ட் & சர்வீஸ் Co EC
அல் அமின் கோ.பார் செகுரிட்டி அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்ட்ஸ்
அல் பராக்கா இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்
அரப் இஸ்லாமிக் பேங்க் E.C
பஹ்ரைன் இஸ்லாமிக் பேங்க் Bsc.
பஹ்ரைன் இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி. Bsc. Closed
பஹ்ரைன் இன்சிடியுட் ஆப் பேங்க்கிங் & பினான்ஸ்
பேங்க் மெல்லி ஈரான்
சேஸ் மன்ஹட்டன் பேங்க் N.A.
சிட்டி இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் லிமிடெட்.
(CiticorpDallah Albaraka (Europe)
டல்லாஹ் அல் பராக்கா அயர்லாந்து லிமிடெட்.
பைசல் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் ஆப் பஹ்ரைன்
பைசல் இஸ்லாமிக் பேங்க் ஆப் பஹ்ரைன்
(மஸ்ரப் அல் பைசல் அல் இஸ்லாமி)
கல்ப் இன்டெர்நேஷனல் பேங்க் BSC
இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ஆப் த கல்ப்
இஸ்லாமிக் ட்ரேடிங் கம்பெனி
ABC இஸ்லாமிக் பேங்க்
ABN அம்ரோ பேங்க்
டச்சு பேங்க் Rep office
இன்வெஸ்ட்டார்ஸ் பேங்க்
TAIB பேங்க் ஆப் பஹ்ரைன்
துர்க் கல்ப் மெர்ச்சன்ட் பேங்க்
பஹ்ரைன் மனிடரி ஏஜென்சி
ஷாமில் பேங்க்
கலீஜ் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி
பர்ஸ்ட் இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்
பங்களாதேஷ் - அல் பராக்கா பங்களாதேஷ் லிமிடெட்
இஸ்லாமி பேங்க் பங்களாதேஷ், டாக்கா
பைசல் இஸ்லாமிக் பேங்க்

பிரிட்டிஷ் விர்ஜின் அய்லண்ட்ஸ் -இப்ன் கல்தூன் இன்டெர்நேஷனல் ஈக்விட்டி பன்ட் லிமிடெட்.

புருனை - இஸ்லாமிக் பேங்க் ஆப் புருனை Berhad
இஸ்லாமிக் டெவெலப்மென்ட் பேங்க் ஆப் புருனை Berhad
தபுங் அமானா இஸ்லாம் புருனை

கனடா - இஸ்லாமிக் கோ ஆபரேடிவே ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட்,

கய்மன் அய்லண்ட்ஸ்- இப்ன் மஜித் எமெர்ஜிங் மார்கெடிங் பன்ட்
அல்-தவ்பிக் கம்பனி பார் இன்வெஸ்ட்மென்ட் பண்ட்ஸ் லிமிடெட். Subsidiary of Albarka Group "DBG".

டென்மார்க் - பைசல் பினான்ஸ் (டென்மார்க்) A/S
எகிப்து - அல்-வத்தனி பேங்க் ஆப் எகிப்து, கய்ரோ
எகிப்து கம்பெனி பார் பிசினஸ் அண்ட் ட்ரடிங் S.A.E
எகிப்து-சவுதி பினான்ஸ் பேங்க் (Dallah Al Baraka), கய்ரோ
கல்ப் கம்பெனி பார் பினன்சியல் இன்வெஸ்ட பைசல் இஸ்லாமிக் பேங்க் ஆப் எகிப்து, கய்ரோ
இஸ்லாமிக் பேங்க் இன்டெர்நேஷனல் பார் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட், கய்ரோ
இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட் கம்பெனி, கய்ரோ
நேஷனல் பேங்க் பார் டெவெலப்மென்ட், கய்ரோ

பிரான்ஸ் -அல்ஜீரியன் சவுதி லீசிங் ஹோல்டிங் கம்பனி. (Dallah Al Baraka Group)
சொசைட்டி ஜெனரல்
காபிடல் கைடென்ஸ் BNP பாரிபாஸ்
காம்பியா - அரப் காம்பியன் இஸ்லாமிக் பேங்க்
ஜெர்மனி - பேங்க் சீபா, ஈரான்
காமர்ஸ் பேங்க்
டச்சு பேங்க்
கினியா - மஸ்ரப் அல் பைசல் அல் இஸ்லாமி ஆப் கினியா,

இந்தியா - அல் அமீன் இஸ்லாமிக் பினான்சியல& இன்வெஸ்ட்மென்ட் Corp. (India)Ltd., Karnatka
பேங்க் மஸ்கட் இன்டெர்நேஷனல் (SOAG)
அல்-பலாஹ் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்
இந்தோனேசியா - அல்-பராக்கா இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்
பேங்க் முஆமலாட் இந்தோனேசியா, ஜகர்த்தா
தார் அல் மால் அல் இஸ்லாமி டிரஸ்ட்
PT Danareksa Fund Management, Jakarta

ஈரான் - Bank Keshavarzi (Agricultural Bank), Tehran
Bank Maskan Iran (Housing Bank), Tehran
பேங்க் மில்லத், Tehran
பேங்க் மில்லி ஈரான், டெகரான்
பேங்க் சதீரட் ஈரான், டெகரான்
Bank Sanat Va Maadan (Bank of Industry and Mines), Tehran
பேங்க் சீபா, டெகரான்
பேங்க் தெஜாரத், டெகரான்
ஈராக் - Iraqi Islamic bank for Investment and Development

இத்தாலி - பேங்க் ஸெபா, ஈரான்

ஐவொரி கோஸ்ட் - இன்டெர்நேஷனல் ட்ரடிங் கம்பெனி பார் ஆப்ரிக்கா

ஜோர்டான் - ஜோர்டான் இஸ்லாமிக் பேங்க் (Subsidiary of Dallah Al Barka Group)

ஜோர்டான் இஸ்லாமிக் பேங்க் பார் பினான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் , அம்மான்

குவைத் - கல்ப் இன்வெஸ்ட் மென்ட் கார்பரேசன்
த இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் குருப்
The International Investor, Safat
குவைத் பினான்ஸ் ஹவுஸ், சபாத்
Kuwait Investment Co - Dar Al-IsethmarSecurities House

இஸ்லாமிய வங்கி முறையே தீர்வு!


சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு
இஸ்லாமிய வங்கி முறையே தீர்வு! வாடிகன் கூறுகிறது!!

மேற்குலக வங்கிகள் இஸ்லாமிய நிதி அமைப்புகளின் விதிகளை அமுல்படுத்தி இன்றைய பொருளாதார சிக்கல்களில் திணறும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என உலக கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகன் கருத்துத் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நிதி அமைப்புகளின் ஆதாரமாகத் திகழும் உயரிய சமய கோட்பாடுகள் வங்கிகளை அதனுடைய வாடிக்கையாளர்களுடன் நெருக்கி வைப்பதுடன் உண்மை யான நன்னம்பிக்கையை ஒவ்வொரு பொருளாதார சேவையிலும் வெளிப் படுத்தும் என வாடிகனின் அதிகாரப்பூர்வ இதழான 'அஸர்வேட்டோர் ரொமானோ' வெளியிட்ட கட்டுரை ஒன்றில் குறிப் பிட்டுள்ளது.

மேற்குலக வங்கிகள் 'சுகூக்' என்றழைக்கப் படும் இஸ்லாமிய பத்திரங் கள் போன்றவற்றை பரஸ்பர உறவைப் பேண உபயோகிக்க வேண்டும் எனவும் அக்கட்டுரை வாதிடுகிறது. வாகன உற்பத்தி மற்றும் லண்டனில் நடைபெற உள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின் போது சுகூக் அடிப்படையில் நிதி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அக்கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.சுகூக் மூலம் பெறப்படும் இலாப பங்கீட்டு முறை வட்டிக்கு மாற்றாக பங்குதாரர்களை வளப்படுத்தும். எனவே வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு இம்முதலீடு பயனுள்ளதாக அமையும்.

இஸ்லாமிய சுகூக் திட்டத்தின்படி முதலீட்டாளர்களின் பணம் உறுதியான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்படும் இலாபம் வாடிக்கையாளர்களுக்கு பங்கீடு செய்யப்படும்.

அஸர்வேட்டோர் பத்திரிக்கையின் ஆசிரியர் 'கியாவானி மாரியா வியன்' பொருளாதாரத்தில் மனிதாபிமான மாண்புகளை சிறந்த மார்க்கம் கவனத்தில் கொண்டுள்ளது என கூறியதாக அப்பத்திரிக்கையின் நிருபர் கோரிரே டெல்லா சீரா தெரிவித்துள்ளார்.