தமுமுக தலைவர்க்கு டாக்டர் பட்டம்

வட்டியில்லாமல் செயல்படும் இஸ்லாமிய வங்கி முறை, மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து, தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் முனைவர் பட்ட ஆய்வை கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்டார்.

தனது விரிவான ஆய்வை சிறப்பாக முடித்து ஆய்வேட்டை சமர்ப்பித்த பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடந்த 29.04.2008 அன்று முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வில் கலந்து கொண்டார்.
புதுக்கல்லூரி, ஆணைக்கார் அப்துஷ் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த வாய்மொழித் தேர்விற்கு, சென்னை பல்கலைக்கழகத்தின் புறநிலைத் தேர்வாளராக மிகச்சிறந்த கல்வியாளரும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளரும், டி.பி ஜெயின் கல்லுரியின் வணிகவியல் துறை பேராசிரியருமான. டாக்டர் பாலு வருகை தந்தார்.
புதுக்கல்லூரி முதல்வர் காதர்பாட்ஷா தலைமை வகிக்க பேரா.கேப்டன் ஜஹித் இறைமறை ஓதினார்.

பொருளாதாரத் துறைத் தலைவர் பேரா. எஸ். அன்வர் வரவேற்புரையாற்றினார்.
புதுக்கல்லூரி வரலாற்றில் இந்நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள், இது பொருளாதாரத்துறையின் முதல் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு. முதலாவதாக ஒரு சமுதாய இயக்கத்தின் தலைவர், பட்டம் பெறுவது கல்லூரிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை என்றார்.
ஆய்வு நெறியாளர் பேரா. டாக்டர் ஏ, அப்துல் ரகீம், ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்புரையாற்றினார்.

தேர்வாளராக, வந்த டாக்டர் பாலு மிகச்சிறப்பான முறையில், வங்கிகளை பற்றியும், அதன் சேவைகளைப் பற்றியும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கி முறை பற்றியும் முன்னுரையாற்றி, ஆய்வுரை வழங்குமாறு, பேரா. ஜவாஹிருல்லாஹ்வைப் பணித்தார்.
இஸ்லாமிய வங்கிகளின் செயற்திறன் மற்றும் சேவை திறன் குறித்த தனது ஆய்விற்காக மலேசியாவின் மிகப் பெரும் இஸ்லாமிய வங்கியான பேங்க் இஸ்லாம் மலேசியாவை எடுத்துக்காட்டாக கொண்டு செய்யப்பட்ட இந்த ஆய்வு குறித்து விரிவாக விளக்கங்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளை தொடங்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டிருந்தது, இது குறித்த தனது ஆய்வின் பரிந்துரைகளையும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் விளக்கினார்.

வட்டியை இஸ்லாம் தடுத்துள்ளது. ஆனால் முஸ்­ம்களுக்கு வங்கி தேவைப்படுகின்றது. இந்த உண்மையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய வங்கிகள் எவ்வாறு செயல்படத் தொடங்கின என்பது குறித்தும், உலக முழுவதும் எவ்வாறு திறம்பட இந்த வங்கிகள் செயல்படுகின்றன என்பது பற்றியும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆதரங்களுடன் எடுத்துரைத்ததை ஆச்சரியத்துடன் அனைவரும் கவனித்தனர்.

'செக்' (சிலீமீஹீமீ) என்பது ஸுக் என்ற அரபிச் சொல் பிறந்தது. உலகின் முதல் செக் 10ம் நுற்றாண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள அ­ப்போ நகரின் இளவரசர் சைபுத்தவ்லாஹ், அல் ஹம்தானியினால் அவர் பக்தாதில் சுற்றுப்பயணம் செய்தபோது அவரது நண்பர்களுக்கு வழங்கப்பட்டது என்பது போன்ற அரிய தகவல்களையும் அறியத் தந்தார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் ஆய்வு தொகுப்பிற்கு வெளிநாட்டுத் தேர்வாளர்களும், சிறந்த மதிப்பீட்டை வழங்கியிருந்தனர்.
பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நெடிய ஆய்வுரைக்குப் பிறகு, புறநிலைத் தேர்வாளர் பாலு, வினாக்களைக் கேட்டார். அளிக்கப்பட்ட பதில்களில் முழு திருப்தியுற்ற, டாக்டர் பாலு, பங்கேற்பாளர்களை வினாக்கள் தொடுக்க அனுமதித்தார்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும் ஜவாஹிருல்லாஹ் பதிலளித்தார். 150 பேரிடம் மட்டுமே நேர்காணல் செய்து ஒரு முடிவிற்கு வருவது சரியா? எனப் பார்வையாளரில் ஒருவர் வினா தொடுக்க, புறத்தேர்வாளர், 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழியைத் தமிழில் குறிப்பிட்டு, சில பேர், உண்மையைப் பன்மடங்குப் பெருக்கிக் கூறுவார்கள். 100 ஐ 1000 என்பார்கள். அதை யாரும், சரிபார்த்துக் கண்டு பிடிக்க முடியாது. இஸ்லாமிய வங்கியல் பற்றிய இந்த ஆய்வு தனது உள்ளத்தை நெகிழ வைத்துவிட்டதாகவும் டாக்டர் பாலு கூறினார். மேலும் சமுதாயத்திற்கு பயன் தரும் வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உள்ளதை உள்ளபடியே கூறியிருக்கிறார். அவரது ஆய்வு நம்பகமானது. ஆகவே, அவரது ஆய்வேடு தனிச் சிறப்பு வாய்ந்தது என சான்றழித்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகின்றது என்று பார்வையாளர்களின் பலத்த வரவேற்ப்பிற்கிடையே தெரிவித்தார்.

புதுக்கல்லூரி வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு இதுவே என்றனர் அக்கல்லுரி பேராசிரியர்கள். சில பேராசிரியர்கள் இதனை தேர்வு என்று சொல்வதை விட இஸ்லாமிய வங்கி குறித்த ஒரு கருத்தரங்கம் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமுதாயப் பிரமுகர்கள், தமுமுகவின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இத்தேர்வில் பங்கேற்றனர்.
புதுக்கல்லூரி பொருளாதாரத்துறையில் பேரா. ஜவாஹிருல்லா முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வுப் பணி பற்றி, பொருளாதாரத்துறைத் தலைவரும் நாட்டு நலப்பணித் திட்ட மூத்த ஒருங்கிணைப்பாளருமான பேரா. டாக்டர் எஸ்.அன்வர் தன் கருத்துக்களை நம்மிடம் பதிவு செய்தார்.

'ஜவாஹிருல்லாஹ் என்ற முத்தை (ஜவாஹிர் முத்து) புகுமுக (றிஹிசி) வகுப்பிலேயே புதுக்கல்லூரி அடையாளம் கண்டு கொண்டது. மாணவப் பருவத்திலேயே, அவர் தன்னை மார்க்கப் பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டார்.

நாங்கள் அன்று அடையாளம் கண்ட முத்து இன்று சமுதாயத்தின் சொத்தாகி இருப்பது எங்கள் அனைவருக்கும் பெருமை. இந்த கல்லூரிக்கும் பெருமை.
எங்கள் துறையின் முதல் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வுக்காக நடந்துள்ளது.
கல்லூரி முதல்வர் பேரா. காதர் பாட்ஷா குறிப்பிட்டது போல, அவர் முதல் மாணவராக மட்டுமில்லாமல் முதன்மை மாணவராகவும் திகழ்கிறார்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் டாக்டர் பட்டத்திற்காக வாய்வழித் தேர்வில் பங்குக் கொள்வதற்காக பல்வேறு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், முக்கியப் பத்திரிகையாளர்கள், ஆற்காடு இளவரசர் நவாப் அப்துல் அ­, முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக், சென்னை பல்கலைகழகத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் டாக்டர் உதுமான் முகைதீன், சென்னை பல்கலைகழகத்தின் அம்பேத்கார் பொருளாதார ஆய்வுத் துறையின் தலைவர் டாக்டர் தங்கராஜ், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லுரியின் செயலாளர் சி. கைசர் அஹ்மது, அக்கல்லுரி முதல்வர் மேஜர் டாக்டர் சையது சஹாபுத்தீன், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சன்டிவி வீரபாண்டியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்தனர்.

பி.ஹெச்.டி. என்னும் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுச் செய்வோரின் ஆய்வு பணிகள் ஒரு நெறியாளரின் மேற்பார்வையில் தான் நடைபெற வேண்டும். பேராசிரியர் எம். ஹெச், ஜவாஹிருல்லாஹ்வின் ஆய்வு நெறியாளராக சென்னை புதுக்கல்லுரி பொருளாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர் ஏ. அப்துல் ரஹீம் அவர்கள் செயல்பட்டார்கள்.
டாக்டர் ஏ. அப்துல் ரஹீம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொருளாதாரத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இளைஞரான டாக்டர் அப்துல் ரஹீம் சிறந்த பொருளாதார நிபுணராக விளங்குகிறார். இவரது ஆய்வு கட்டுரைகள் தரம் வாய்ந்த சர்வதேச ஆய்வு இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது வழிகாட்ட­ன் கீழ் எட்டு பேர் தற்போது டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களில் முதலாவதாக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆய்வை நிறைவுச் செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஒரு சமுதாய தலைவர் தனது மேற்பார்வையின் கீழ் ஆய்வுச் செய்து முதலாவதாக டாக்டர் பட்டம் பெறுவது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக டாக்டர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.